மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகளும் விளையாடிய குறைவான ரன்கள் மட்டுமே எடுத்துள்ள இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பற்றி பலரும் விமர்சித்து பேசி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் சுப்மன் கில் பேட்டிங் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” கில் ரன்களை அடிக்க வேண்டும். ஐபிஎல்லில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார், ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் அவர் சரியாக விளையாடமாட்டிக்கிறார். அவர் ஒவ்வொரு பந்து வீச்சிலும் பெரிய ஷாட்டை ஆட முயற்சிக்கிறார். ஆனால், அவருக்கு அது கை கொடுக்கவில்லை.
சுப்மன் கில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அணியில் உங்கள் இடம் வாடகை வீடு போன்றது, நான்கைந்து போட்டிகளுக்கு வாடகை கொடுக்கவில்லை என்றால் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்கள். அனைவருக்கும் அவ்வளவு வாய்ப்புதான் கிடைக்கும். அதிக ரன் அடித்ததால் யாராவது ஆறுமாதம் வாடகை கொடுத்தால் அவருக்குக் கிடைக்கும்.
சுப்மன் கில் அந்த வகையில் இருக்கிறார் ஆனால் அது நிரந்தரமாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை இன்னும் ஒரு போட்டியில் மட்டும் தான் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறன். எனவே, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்து அவர் ஒழுங்காக விளையாட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் யஷஸ்வி விளையாடுவது நல்ல ஒரு விஷயம் தான். ஆனால், இஷான் கிஷனுக்கு நேராக இடமாற்றம் செய்யலாம், இடது கை ஆட்டக்காரருக்கு இடது கை ஆட்டக்காரர் என்பதால் அது சரியாக இருக்கும். ஆனால், இஷான் கிஷனின் கடைசி டி20 வடிவத்தில் 10 முதல் 12 போட்டிகளைப் பார்த்தால், அவரது செயல்திறன் அவ்வளவு நன்றாக இல்லை.
இருப்பினும், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அரைசதம் விளாசி உள்ளார். எனவே, ஹர்திக் பாண்டியா , கிஷனுக்கு வாய்ப்புகளை வழங்கியே ஆகவேண்டும் ” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…