சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி விளையாட்டு துறையில் மிகப்பெரும் பிரபலங்களாக உள்ளனர். இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக திகழந்தவர் சானியா மிர்சா. முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
கடந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்த நிலையில், முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா இடையே திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த ஆண்டு துவக்கத்தில் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் விவாகரத்து பெற்றுக் கொண்டு மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதே போன்று முகமது ஷமியும் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இருவரும் மண வாழ்க்கையில் விவகாரத்து ஆனவர்கள் என்பதால், முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா இடையிலான திருமணம் குறித்த தகவல் மிக வேகமாக பரவியது. இந்த நிலையில், இருவரின் திருமணம் தொடர்பான தகவல்களில் துளியும் உண்மையில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறும் போது, “இந்த தகவல்கள் அனைத்தும் பொய். சானியா அவரை சந்தித்தது கூட இல்லை” என்றார். தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியுள்ள சானியா மிர்சா சமீபத்தில் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டார். பிறகு, தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.
சமீபத்திய தகவல்களின் படி சானியா மிர்சா 2024 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்க கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…