டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் க்ரூப் டி-யில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றது.
ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியது. இந்த அணியின் ஷகிப் அல் ஹாசன் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்பே ஷகிப் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர் ஒரு வங்காளதேச வீரர் என்பதை நினைவில் வைத்திருந்திருந்து அதற்கேற்ப முடிவெடுத்திருக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வங்காளதேச அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கைஸ் சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வித மரியாதையையும் பெறவில்லை, இதனால் அவருக்கு மற்ற வீரர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் போது ஒரு லெஜண்ட் வீரர் மனதில் என்ன நினைப்பார் என்றே தெரியவில்லை. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்றவர்கள் இப்படி பேசுவதை பார்க்க முடியாது. ஏனெனில், அவர்களுக்கு சக வீரர்களுக்கு மதிப்பளிக்க தெரியும். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மரியாதை பெறாததால், அவருக்கு மற்ற வீரர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை.”
“மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இதர நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை மதிப்பிடுவது வாடிக்கையான விஷயம் தான். ஆனால் விரேந்திர சேவாக் தனது வாழ்நாள் முழுக்க இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் இதேபோன்ற கருத்துக்களை எங்கள் நாட்டின் மீதும் தெரிவித்துள்ளார். அப்போது, எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களது வீரர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்த தெரியாதவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”
“ஷகிப் அல் ஹாசன் போன்ற வீரர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஷகிப் அல் ஹாசன் ஒரே இரவில் வெளிச்சத்திற்கு வந்தவர் இல்லை. அவரது கிரிக்கெட் சாதனைகளை பார்த்தால், அவர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். நீண்ட காலமாக முன்னணி ஆல்-ரவுண்டராக ஷகிப் அல் ஹாசன் இருந்துள்ளார். இவரை போன்ற வீரர்களை மரியாதையுடன் பேசுவது அவசியம் ஆகும்,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…