இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வெர்மா. இவர் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷஃபாலி இந்த சாதனையை படைத்தார்.
இன்றைய (ஜூன் 28) ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி 194 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இதுதவிர இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ்-க்கு அடுத்தப்படியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
முன்னதாக மித்தாலி ராஜ் 407 பந்துகளை எதிர்கண்டு 214 ரன்களை குவித்தார். இந்த சாதனையை 2022 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மித்தாலி ராஜ் படைத்தார். இன்றைய போட்டியில் டெஸ்ட் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்த ஷஃபாலி வெர்மா 23 பவுண்டரிகளையும், 6 சிக்சர்களையும் விளாசினார்.
தென் ஆப்பிரிக்கா வீரர் டெல்மி டக்கர் வீசிய ஓவரை எதிர்கொண்ட ஷஃபாலி வெர்மா அடுத்தடுத்த சிக்சர்கள் மற்றும் சிங்கில் அடித்து இரட்டை சதத்தை கடந்தார். 197 பந்துகளை எதிர்கொண்ட ஷஃபாலி வெர்மா 205 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் களத்தில் இருந்து வெளியேறினார்.
இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 149 ரன்களை விளாசினார். இதில் 27 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 52 ஓவர்களிலேயே 292 ரன்கள் என்ற வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொண்டது.
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் முறையே 42 மற்றும் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளையும், டி கிலெர்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…