Categories: Cricket

தோள் மீது பாசமாக கை போட்ட பாக். கேப்டன், தட்டிவிட்ட ஷாகின் ஷா அப்ரிடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தங்களது முதலாவது போட்டியை வெல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் கனவு நேற்று நிறைவேறாமல் போனது. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்கதேசம் அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம் அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது அதுவே முதல் முறை ஆகும்.

நேற்றைய வெற்றி காரணமாக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி வருகிற 30 ஆம் தேதி நடைபெற இருக்கிபறது. இந்த போட்டியும் முதல் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டியில் தான் நடைபெறுகிறது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அதில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியின் தோள் மீது கை வைக்கிறார். சிறிது நேரம் அமைதி காத்த ஷாகின் ஷா அப்ரிடி பிறகு கேப்டன் ஷானின் கையை தனது தோள் மீது இருந்து தூக்கிவிட்டார்.

முன்னதாக ஷாகின் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது கேப்டனின் கையை தனது தோளில் இருந்து ஷாகின் எடுத்துவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணியின் மெஹிடி ஹாசன் மற்றும் ஷகிப் அல் ஹாசன் அபாரமாக பந்துவீசினர். இருவரும் சேர்ந்து ஏழு விக்கெட்டுகளை சாய்த்த நிலையில், பாகிஸ்தான் அணி 55.5 ஓவர்களில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக வங்கதேசம் அணி 30 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜாகிர் ஹாசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஜோடி 6.3 ஓவர்களில் வெற்றி இலக்கை துரத்தி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago