இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக உருவாகி வருபவர் சுப்மன் கில். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்கு தேர்வான சுப்மன் கில் இந்திய அணியின் பேட்டிங்கில் அசாத்தியமாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங் மட்டுமின்றி சுப்மன் கில் அணியை வழிநடத்துவதிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தும் சுப்மன் கில், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் வகையில் வழிநடத்தினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு விரைவில் துவங்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில் ஒருநாள், மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று நம்புவதாக முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
“குஜராத் டைட்டன்ஸ் அல்லது ஜிம்பாப்வே என எவ்வகையில் பார்க்கும் போதும் சுப்மன் கில் சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளார். அவரது உடல்மொழி அபாரமாக இருக்கிறது. ஒரு அணியை வழிநடத்துவதற்கு அது மிகமுக்கியமான ஒன்று. துணை கேப்டனாக அறிவித்ததன் மூலம், பிசிசிஐ தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளது. இதிலும் அவர் சிறப்பாக செயல்படுவார்.”
“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலைசிறந்து விளங்குவதற்கு கேப்டன் பொறுப்பு மிகப்பெரிய பங்காற்றியதாக நான் நினைக்கிறேன். இதே விஷயம் சுப்மன் கில்லுக்கும் நடக்கும் என்று உணர்கிறேன். அவர் இன்னும் கேப்டன் ஆகவில்லை என்ற போதிலும், தலைமை பண்பு அவரிடம் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
“மற்றவர்களை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும்போது, உங்களுக்கான பொறுப்புணர்வு அதிகரிக்கும், இது நல்ல விஷயம். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு இது சிறப்பான ஒனஅறு. இது ஒருநாள் அவரை இந்திய கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளுக்கான அணியை அவர் வழிநடத்துவார்,” என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…