இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. அடுத்ததாக இரு அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை மிக மோசமாக இழந்த இலங்கை அணி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்து இருக்கிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்கு வந்துள்ளது.
இந்தியா இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், இலங்கை அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 105 ஆவது போட்டியில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 104 தோல்விகளை சந்தித்த வங்காளதேசத்தை பின்னுக்குத் தள்ளியது.
இலங்கை, வங்காளதேசம் அணிகளை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முறையே 101 மற்றும் 99 தோல்விகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு ஜிம்பாப்வே மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அடுத்தடுத்து டி20 தொடர்களில் வெற்றி பெற்று வருகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்த இந்தியா, இலங்கை சுற்றுப் பயணத்தின் போது டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…