Connect with us

Cricket

இந்தியாவில் சொந்த வியாபாரம்.. ரூ. 1400 கோடி முதலீடு செய்யும் முத்தையா முரளிதரன்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவில் உணவுத்துறை வியாபாரத்தில் கால்பதிக்கிறார். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகரா மாவட்டத்தில் சொந்தமாக குளிர்பான உற்பத்தி ஆலையை உருவாக்க இருக்கிறார்.

இவரின் புதிய வியாபாரம், “முத்தையா பிவெரேஜஸ் அண்ட் கன்ஃபெக்ஷனரிஸ்” என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. புதிய வியாபாரம் தொடர்பாக முத்தையா முரளிதரன் அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல்-ஐ நேரில் சந்தித்தார். இந்த வியாபாரம் மூலம் உள்ளூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உள்கட்டமைப்புகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு ரூ. 230 கோடியில் துவங்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது இந்த வியாபாரத்தில் ரூ. 1400 கோடிகள் முதலீடு செய்யப்படுகின்றன. இதற்காக முதற்கட்டத்திலேயே ரூ. 1000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதில் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட 46 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் உற்பத்தி ஆலை கட்டமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

புதிய நிறுவனம் தொடர்பாக நிலவி வந்த சிறு நிலப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத காலத்தில் பணிகளை துவங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார். மேலும், முத்தையா முரளிதரனின் எதிர்கால திட்டம் குறித்தும் அமைச்சர் விரிவாக பேசினார். அப்போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் இதேபோன்று மற்றொரு உற்பத்தி ஆலையை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

குளிர்பான துறையில் களமிறங்குவதன் மூலம், முத்தையா முரளிதரன் கிரிக்கெட் மட்டுமின்றி வியாபார துறையிலும் அதிக கவனம் கொண்டவராக பார்க்கப்படுகிறார். மாநில அரசின் ஒத்துழைப்பு, திட்டங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைக்கு ஏற்ற இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி என்ற அடிப்படையில், முத்தையா முரளிதரன் தனது வியாபாரத்திற்கு கர்நாடக மாநிலத்தை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதவிர முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ளார். இவரது ஆலோசனையின் கீழ் சன்ரைசர்ஸ் அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

கடவுளே இந்தியா கப் ஜெயிக்கனும்.. விசேஷ பூஜை செய்த ரசிகர்கள்

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்களை உச்சக்கட்ட பரபரப்பில் வைத்திருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இன்றைய இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்காக இன்று காலையிலேயே கோவிலுக்கு புறப்பட்ட ரசிகர்கள் அங்கு இந்திய அணி சிறப்பாக விளையாட கடவுளிடம் வேண்டினர்.

கான்பூரை அடுத்த புனித தளமான வாரணாசியில் இந்திய அணி ரசிகர்கள், இன்றைய இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றிப் பெற்று கோப்பையை வெல்ல சிறப்பு யாகம் நடத்தினர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற முடியும். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி ஐ.சி.சி. கோப்பை எதையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை.

அந்த வகையில் இன்று உலகக் கோப்பையை வெல்லும் அணி, டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பெற முடியும்.

Continue Reading

Cricket

டி20 உலகக் கோப்பை: அவருக்காக ஜெயிக்கனுமா? இது ரொம்ப மோசம் – அஷ்வின்

Published

on

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில் இருந்தே, இந்தியா இந்த முறை ராகுல் டிராவிட்-க்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

முன்னாள் வீரர்கள் துவங்கி ரசிகர்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிட்-க்காக இந்த முறை கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஆர்வமுடன் கருத்தை பகிர்ந்து வரும் இந்திய அணி வீரர் ரவிசந்திரன் அஷ்வின் இந்த விவகாரம் குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அணியாக விளையாடக்கூடிய போட்டி ஒன்றை தனிநபருக்காக பில்டு-அப் செய்வது, ஆரோக்கியமான சூழலில் ஏற்படக்கூடிய மிக மோசமான காரியம் ஆகும். இந்த நபரை எனக்கு நன்றாக தெரியும். இதுபற்றி அவரிடம் கூறிய போதே, அதனை தனக்கே ஏற்றவகையில் அதை திசைதிருப்பிவிட்டார். இன்னும் ஒரு முறை போட்டியிடுவோம்,” என்று குறிப்பிட்டு கூடவே #proudofteamIndia எனும் ஹேஷ்டேக்-ஐ இணைத்துள்ளார்.

முன்னதாக உங்களுக்காக இந்த கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆதரவுக்குரல் எழுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்வி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், “ஒரு நபராக எனக்கு எதிரான ஒன்று, மொத்தமாக அது எனது மதிப்புகளுக்கு எதிரானது. மற்றவர்களுக்காக செய்யுங்கள் என்ற விஷயத்தில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இது குறித்த மேற்கோள் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதில் ஒருவர் இன்னொருத்தரிடம் நீங்கள் ஏன் இமயமலை மீது ஏற விரும்புகிறீர்கள் என்று கேட்பார். அதற்கு அவர் இமயமலை மீது ஏன் ஏற விரும்புகிறேன் என்றால், அது அங்கு இருக்கிறது. இதே போல் உலகக் கோப்பை ஏன் வெல்ல வேண்டும் என்று கேட்டால், ஏனெனில் அது அங்கு இருக்கிறது. அது யாருக்காகவும் இல்லை. யாராவது வெல்வார்கள் என்றே அது அங்கு இருக்கிறது. இன்னொருத்தருக்காக செய்யுங்கள் என்ற விஷயம் என் கருத்துக்கு எதிரானது. அதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.

Continue Reading

Cricket

90 ஆண்டுகளில் முதல்முறை.. இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.. என்ன தெரியுமா?

Published

on

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிக்கா அணிகள் மோதும் ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்து அசத்தியது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 525 ரன்களை குவித்தது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதன்படி இந்த போட்டியின் 109-வது ஓவரை தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஆனெரி டெர்க்சென் வீசினார். இதை எதிர்கொண்டு ரிச்சா கோஷ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 579 ஆக மாறியது. இது மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக மாறியது.

முன்னதாக ஆஸ்கிரேலியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்களை அடித்ததே மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனைக்கு துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடியின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய காரணியாக அமைந்தது.

இந்த ஜோடி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 292 ரன்களை அடித்து அசத்தியது. இது மகளிர் கிரிக்கெட்டில் துவக்க வீராங்கனைகளின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆக மாறியது. இவர்கள் மட்டுமின்றி இந்தியா சார்பில் ஜெர்மியா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இவர்கள் முறையே 55, 69 மற்றும் 86 ரன்களை குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 603 ரன்களை எட்டியது. இந்த போட்டியின் 115.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களை எடுத்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

Continue Reading

Cricket

இந்திய வீரர்கள் உலக கோப்பையை வெல்ல இதை செய்ய வேண்டும்… சவுரவ் கங்குலியின் சூப்பர் அட்வைஸ்

Published

on

By

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்திக்க இருக்கிறது. இதில் இந்தியா கோப்பையை வெல்ல செய்ய வேண்டியது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.

சவுரவ் கங்குலி கூறும்போது, நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தபோது கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவுக்கு கொடுக்கும் போது அவர் உடனே ஒப்புக்கொள்ளவில்லை. ரொம்பவே யோசித்தார். அவரை ஒப்புக்கொள்ள வைக்க நிறைய நேரம் எடுத்தது.

தற்போது அவர் தலைமையில் இந்திய அணி 6 மாதங்களில் அடுத்தடுத்த உலக கோப்பை இறுதிபோட்டிக்கு வந்து இருக்கிறது. அதே நேரத்தில் ரோஹித் சர்மா ஐபிஎல்லில் 5 கப்பை வென்று கொடுத்துள்ளார். இதுபோன்று கோப்பையை வெல்வது கடினம். சர்வதேச போட்டிகளை விட ஐபிஎல் கடினம் எனக் கூறவில்லை.

ஐபிஎல்லில் 17 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால் இந்த மாதிரியான உலககோப்பை தொடர்களில் 6-7 போட்டிகளில் வென்றால் போதும். தொடர்ந்து இறுதிபோட்டியில் தோற்று கோப்பையை தவறவிடுவதை ரோஹித் சர்மா விரும்பமாட்டார். இதனால் இந்திய அணி பதற்றமில்லாமல் விளையாடினாலே போதும் கோப்பையை வெல்லும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading

Cricket

விடுப்பா பாத்துக்கலாம்.. கோலியை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட்

Published

on

2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி இதுவரை தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. எனினும், விராட் கோலி வெறும் 75 ரன்களையே அடித்துள்ளார். நேற்றைய அரையிறுதி போட்டியில் விராட் கோலி 9 ரன்களை எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அரையிறுதி போட்டியில் சிற்பபான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய விராட் கோலி வருத்தத்துடன் டக் அவுட் நோக்கி நடையை கட்டினார்.

டக் அவுட்டில் முகம் முழுக்க சோகம் நிரம்பிய கோலியை பார்க்க நேரிட்டது. அப்போது அவரை நோக்கி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை தட்டிக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

வீடியோவில் கமென்ட் செய்வோர், விராட் கோலிக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் விராட் கோலி மூன்றாவது வீரராக களமிறங்குவது தான் சரியான ஒன்று என தெரிவித்தனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்-ஐ வென்றார். எனினும், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்க முடியாமல் அவுட் ஆகினார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 37 ரன்களை அடித்ததே அவரின் சிறப்பான ரன்களாக இருக்கிறது.

Continue Reading

Trending

Exit mobile version