இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதின. இதில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இங்கிலாந்து அனி தொடரை கைப்பற்றியிருந்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து முன்னூற்றி இருபத்தி ஐந்து ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி இருநூற்றி அறுபத்தி மூன்று ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
தனது இரண்டாவது இன்னிங்கஸை ஆடத்துவங்கிய இங்கிலாந்து அணி நூற்றி ஐம்பத்தி ஆறு ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியின் குமரா நான்கு விக்கெட்டுகளையும்ம் விஷ்வா ஃபெர்ணான்டோ மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க பேட்ஸ்மேன் பதும் நிஷங்கா சதமடித்தார். குஷால் மெண்டிஸ் முப்பத்தி ஒன்பது ரன்களையும், மேத்யூஸ் முப்பத்தி இரண்டு ரன் களையும் குவிக்க இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருனூற்றி பத்தொன்பது ரன்களை குவித்து வெற்றிக்கான இலக்கை எட்டிப்பிடித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த நிஷாங்கா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடரின் நாயகர்களாக இலங்கை அணியின் கமிந்து மெண்டிசும், இங்கிலாந்து அணியின் ஜோரூட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இலங்கை அணி. கடந்த 2014ம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றதே, இதற்கு முன்னர் இங்கிலாந்தை அதன் சொந்த மண்னில் வீழ்த்திய போட்டியாக இருந்து வந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை அணி.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…