Connect with us

Cricket

ராகுல் டிராவிட்-க்கு பாரத ரத்னா கொடுங்க.. சுனில் கவாஸ்கர்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்ட ராகுல் டிராவிட்-க்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார்.

இவரது தலைமையில் இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டது. எனினும், இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்ல தவறியது.

“ராகுல் டிராவிட்-க்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும். நம் நாட்டின் தலைசிறந்த வீரர் மற்றும் கேப்டன் ஆவார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற சர்வதேச களங்களில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற நீண்ட கால ஏக்கத்தை தீர்த்து வைத்ததில் ராகுல் டிராவிட்-க்கு அதிக பங்குகள் உண்டு. இவரது தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-லும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.”

“தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் போன்ற பதவிகளில் ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டுள்ளார். டிராவிட்-இன் சாதனைகள் கட்சி, மதம், சமூகம் என பல எல்லைகளை கடந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. உண்மையில் அவர் இதற்கு தகுதியானவர். என்னுடன் இணைந்து கொண்டு அனைவரும் இந்திய அரசுக்கு இது தொடர்பாக கோரிக்கையை வைக்க கேட்டுக் கொள்கிறேன்,” என்று சுனில் கவாஸ்கர் மிட்-டே தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

google news