கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுக்க மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடு மற்றும் கொலை சம்பவம் குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இத்தகைய பிரச்சினைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதை தவிர்த்து, ஆண்களை சரியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டா பதிவில், “உங்கள் மகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற வாக்கியம் அழிக்கப்பட்டு, அதன் கீழ் சிவப்பு நிறத்தில் உங்கள் மகன், சகோதரர்கள், தந்தை, கணவர் மற்றும் நண்பர்களுக்கு கற்றுக் கொடுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தனது நகரில் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
“இந்த சம்பவம் எப்படி அரங்கேறியது, அது எப்படி விவரிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இது பயங்கரமாக விஷயம். இது குறித்து சிபிஐ, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மிகவும் அவமானகரமாக இருக்கிறது.”
“இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரிகள், குற்றவாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை, இனி இப்படியொரு சம்பவத்தை வாழ்நாள் செய்ய யாருக்கும் தைரியம் வரக்கூடாது. அந்த அளவுக்கு தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்,” என்று சவுரவ் கங்குலி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…