இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அடுத்த வாரம் துவங்கும் டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து முதல்முறை மனம் திறந்த சூர்யகுமார் யாதவ், இதுபற்றி தான் கனவில்கூட நினைத்தது இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொடர்ந்து அன்பை பொழிந்து, ஆதரவளித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி. கடந்த சில வாரங்களில் நடக்கும் சம்பவங்கள் நான் கனவிலும் நினைக்காதவை. அவற்றுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நாட்டிற்காக விளையாடும் உணர்வை என்னால் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாது.”
“புதிய பதவி அதிக பொறுப்பு, சுவாரஸ்யம் மற்றும் புத்துணர்ச்சியை கொண்டுவருகிறது. உங்களது ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் தொடர்ந்து எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். எல்லா புகழும் கடவுளேக்கே சேரும். கடவுள் சிறந்தவர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். இவரது அறிவிப்பை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டனாக தொடர்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறும் டி20 தொடர் மூன்று போட்டிகளை கொண்டது. இவை ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…