இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புச்சி பாபு தொடரில் விளையாட இருக்கிறார். இதனை மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையின்படி சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டி வருகிற 27 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது. நடப்பு ரஞ்சி கோப்பை வெற்றியாளர்களான மும்பை 2024 புச்சி பாபு தொடரின் க்ரூப் சி பிரிவில் இடம்பஎற்று உள்ளது.
இந்த பிரிவில் மும்பை, தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் இடம்பெற்று உள்ளன. இந்த தொடர் வருகிற 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் மும்பை அணிக்கு சர்பராஸ் கான் கேப்டனாக செயல்படுகிறார். முன்னதாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். இவரது தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. டி20 தொடர் முடிந்தவுடன் குறுகிய கால இடைவெளியில் 50 ஓவர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்தார்.
இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் நேரடியாக புச்சி பாபு தொடரில் தான் விளையாட உள்ளார். இதைத் தொடர்ந்து துலீப் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார். சூர்யகுமார் யாதவ் 82 முதல்தர போட்டிகளில் 5628 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 43.62 ஆகும். இதில் 29 அரைசதங்கள், 14 சதங்கள் அடங்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…