டி20 உலகக் கோப்பை தொடரை அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் ஜூலை 6 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் தலைமை தாங்குகிறார். இவருடன் ஐ.பி.எல். 2024 தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், நிதிஷ் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பந்துவீச்சுக்கு ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…