டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது. நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சென்ற தங்கும் விடுதியிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வீரர்கள் தங்கிய ஓட்டலில் அவர்களுக்கு மேளதாளங்களோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்களை கண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா குத்தாட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஓட்டல் சார்பில் இந்திய அணிக்காக விசேஷ கேக் தயாரிக்கப்பட்டு இருந்தது.
அதனை இந்திய வீரர்கள் வெட்டினர். பிறகு பிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இருந்து நேரடியாக மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் வாகனங்கள் மூலம் அணிவகுப்பு மரியாதை, வீரர்கள் வந்த விமானத்தின் மீது இருபுறமும் தண்ணீர் பீய்த்து அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் மும்பையின் மெரைன் டிரைவில் நகர் வலம் வருகின்றனர். இதற்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திறந்தவெளி வாகனத்தில் இந்திய வீரர்கள் உலகக் கோப்பையுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
உலகக் கோப்பையை வென்று வந்துள்ள இந்திய வீரர்களை காண மெரைன் டிரைவ் முழுக்க ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கடலை ஒட்டிய சாலை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்த இடமே விழா கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளதால், வீரர்களின் திறந்தவெளி வாகனம் ஊர்ந்து வருகிறது. இதன் காரணமாக வான்கடே மைதானத்தில் நடைபெறும் விழா தாமதமாகவே துவங்கும் என்று தெரிகிறது.
வான்கடே மைதானத்தில் நடைபெறும் விழாவை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் வந்துள்ளனர். இன்றும் மாலையில் இருந்தே மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வெற்றி கொண்டாட்டத்தை காண வான்கடே மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…