Ra2024 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்கு பல்வேறு டுவிஸ்ட் சம்பவங்களை விருந்தளித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் சொதப்புவதும், எதிர்பாரா அணிகள் சூப்பரான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி உள்ளன.
அந்த வகையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆச்சரியமூட்டிய அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. க்ரூப் சி-இல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
தனது மூன்றாவது போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை நேற்றிரவு எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இதே பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி லீக் சுற்று போட்டிகளோடு தொடரில் இருந்து வெளியேறியது.
ஆப்கானிஸ்தான் அணியின் மிரட்டல் செயல்பாடு குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ரஷித் கான், எங்களது துவக்க வீரர்கள் கடந்த இரு போட்டிகளில் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இங்கு வருவதற்கு முன் நாங்கள் உள்ளூர் போட்டியில் விளையாடினோம், தற்போது அனைவரும் ஃபார்மில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் போது களத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். எங்கள் வீரர்களில் சிலர் செயின்ட் லூசியாவில் விளையாடி உள்ளனர். அவர்களுக்கு இந்த பிட்ச் பற்றி நன்றாக தெரியும். அனைவரும் சூழலுக்கு ஏற்றவாறு விளையாடும் திறன் கொண்டுள்ளனர். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன், என்று கூறினார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…