Connect with us

Cricket

சேட்டை பிடிச்ச பசங்க சார்.. போட்டிக்கு நடுவில் செல்பி எடுத்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா – ரிஷப் பண்ட்

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற இந்த போட்டியில் அரங்கேறிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நேற்றைய போட்டியின் போது, இடையில் கிடைத்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா போட்டி நடுவில் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவின் படி இந்திய அணி பந்துவீச்சின் போது, ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா சத்ரன் ஆட்டமிழந்த போதுதான் செல்பி சம்பவம் அரங்கேறியது.

போட்டில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை அடிக்க முயன்ற நஜிபுல்லா சத்ரன் சரியான டைமிங்கில் அடிக்காததால், பந்து அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் ஆக மாறியது. விக்கெட்டை இழந்து நஜிபுல்லா நடையை கட்ட போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்பைடர் கேமரா களத்திற்குள் இறக்கப்பட்டது. இதை சரியாக கவனித்த ஹர்திக் பாண்டா, உடனே துரிதமாக செயல்பட்டு செல்பி எடுத்தார்.

மேலும், செல்பி எடுக்க ரிஷப் பண்ட்-யும் ஹர்திக் அழைத்துக் கொண்டார். இருவரும் ஸ்பைடர் கேமராவில் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கடந்த 2 ஆண்டுகளில் இங்கு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இதோடு சிறிய திட்டம் தீட்டியிருந்தோம். இங்குள்ள கள சூழலை எங்களுக்கு ஏற்றவாரு சரியாக ஏற்றுக் கொண்டோம். எங்களது பந்துவீச்சு இந்த ஸ்கோரை கட்டுப்படுத்தும் என்று எங்களுக்கு தெரியும். அனைவரும் அவர்களின் பணியை மேற்கொள்கின்றனர். இதைபற்றி தான் நாங்கள் பேசிக் கொண்டு இருப்போம் என்றார்.

google news