Connect with us

Cricket

T20 World Cup: பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கைக்கு சூப்பர் 8 வாய்ப்பு எப்படி?

Published

on

வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கான போட்டி தீவிரமடைந்திருக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெளியேறும் தருவாயில் இருக்கின்றன. இது சூப்பர் 8 சுற்றுக்கான போட்டியை பரபரப்பாக்கியிருக்கிறது. இதில், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற எந்த அளவுக்கு வாய்ப்பிருக்கிறது?

பாகிஸ்தான்

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும் கனடாவுக்கு எதிரான வெற்றி குரூப் ஏ-யில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தானுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. ரன் ரேட்டும் 0.191 என்று முன்னேற்றம் கண்டிருக்கும் நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும். அதேபோல், அமெரிக்கா அடுத்து விளையாடும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். அயர்லாந்து போட்டியில் முதலில் பேட் செய்து 112 ரன்களை ஸ்கோர் செய்யும் பட்சத்தில், அமெரிக்க அணி குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட போதும். அதேநேரம் மழையால் அயர்லாந்து போட்டி கைவிடப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும்.

இங்கிலாந்து

குரூப் ஏ-யில் பாகிஸ்தான் இருக்கும் அதேநிலைதான் குரூப் பி-யில் இங்கிலாந்து அணியும் இருக்கிறது. இங்கிலாந்து, அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டியதோடு, ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 15-ல் நடக்கும் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அதேபோல், ஸ்காட்லாந்து 2.164 ரன் ரேட்டோடு இருக்கும் நிலையில், -1.8 என்கிற ரன் ரேட்டில் இருக்கும் இங்கிலாந்து நெட் ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வருண பகவான் வழி விடாவிட்டால் இங்கிலாந்து பாடு திண்டாட்டம்தான்.

இலங்கை

நேபாளத்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்த உலகக் கோப்பையில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத இலங்கை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினமான காரியம்தான். இருப்பினும் மயிரிழையில் அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. நெதர்லாந்தை வீழ்த்தினாலும் அந்த அணி அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே பெற இயலும். அதேநேரம், வங்கதேசம் – நெதர்லாந்து அணிகளுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், அவை தலா 2 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த அணிகள் விளையாடும் போட்டி மழையால் கைவிடப்பட்டு, அடுத்த ஒரு போட்டியை இரு அணிகளும் வென்றால், இரண்டாவது இடத்துக்கான போட்டியில் இலங்கையும் 3 புள்ளிகளோடு இருக்கும். அந்த சூழ்நிலையில், நெட் ரன் ரேட் உதவியோடு இலங்கை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறலாம்.

நியூஸிலாந்து

இந்த லிஸ்டில் மிகவும் பின்தங்கியிருக்கும் அணி என்றால் அது நியூஸிலாந்துதான். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி அந்த அணியின் சூப்பர் 8 வாய்ப்பை பெரிய அளவுக்கு பதம் பார்த்திருக்கிறது. ஆப்கானிஸ்தானும் வெஸ்ட் இண்டீஸும் வலுவான ரன் ரேட்டோடு இருக்கிற நிலையில், அதை முறியடிக்க வெஸ்ட் இண்டீஸை அதிக ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்து இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் நியூஸிலாந்து தோற்றால், பி.என்.ஜி மற்றும் உகாண்டாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

சூர்யகுமார் அந்த கேட்ச்-ஐ விட்டிருந்தால் இதுதான் நடந்திருக்கும்.. ரோகித் சர்மா

Published

on

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் வழி வகுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் அடித்த பந்தை, சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டில் வைத்து பிடித்ததே இந்திய வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா போட்டியின் கடைசி ஓவரை அதிக சிறப்பாக வீசி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தார்.

இந்த போட்டி முடிந்து கிட்டத்தட்ட ஒருவார காலம் முடிந்து விட்டது. எனினும், இந்த கேட்ச் இன்றும் பேசுபொருளாகவே இருக்கிறது. அந்த வகையில், இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் டேவிட் மில்லர் கேட்ச்-ஐ தவறவிட்டிருந்தால் அவரை அணியில் இருந்து நீக்கி இருப்பேன் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், சிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய ரோகித் சர்மா சூர்யகுமார் யாதவை அணியில் இருந்து நீக்கி இருப்பேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் பந்து தனது கைகளில் வந்து விழுந்ததாக தெரிவித்தார். அது சரியாக நடந்ததால் நல்லது. இல்லையெனில் அவரை அணியில் இருந்து நீக்கியிருப்பேன், என்று ரோகித் சர்மா நக்கலாக தெரிவித்தார். இதை கேட்டதும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

சூர்யகுமார் யாதவ் பிடித்த டேவிட் மில்லர் கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகின. அவற்றில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் சரியானது தான் என்றும், அது அவுட் தான் என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர்.

google news
Continue Reading

Cricket

சூர்யகுமார் யாதவ் கேட்ச்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த புது வீடியோ

Published

on

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும், அந்த கேட்ச்-க்கு முன்பாக பவுண்டரி லைன் மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் களத்தில் இருந்த விமர்சகர்கள் விளக்கம் அளித்தனர். எனினும், இந்த விஷயம் சமூக வலைதளங்களில் புகைந்து கொண்டே தான் இருந்தது. இந்த நிலையில், கேட்ச் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய வீடியோ வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியான வீடியோக்களை விட புது வீடியோ வேறொரு கோணத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டில் இருந்தபடி மிகவும் லாவகமாக கேட்ச் பிடித்த காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

வீடியோவின் படி, எல்லை கோடு அருகே ஓடி வந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்ததும் அதனை காற்றில் தூக்கி வீசுகிறார். பிறகு எல்லை கோட்டின் வெளியே சென்று மீண்டும் அதிவேகமாக உள்ளே காலை வைத்து பந்தை மீண்டும் பிடித்துக் கொள்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது எல்லை கோடு மாற்றப்பட்டதாக கூறிய சர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் உள்ளது.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அந்த கேட்ச் மிக சரியாக பிடிக்கப்பட்டது தான் என்றும் வாதாடி வருகின்றனர்.

google news
Continue Reading

Cricket

அப்போ எல்லாரும் என்ன திட்டினாங்க.. மோடியிடம் மனம்திறந்த ஹர்திக் பாண்டியா

Published

on

டி20 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோப்பையை வென்று வந்த வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் புகைப்படம், வீடியோக்களை எடுத்துக் கொண்டார்.

பிரதமர் மோடி வீரர்களுடன் உரையாடிய வீடியோக்கள் தாமதமாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வெளியான வீடியோ ஒன்றில் ஹர்திக் பாண்டியா பிரதமர் மோடியிடம் பேசிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது. அதில், ஹர்திக் பாண்டியா பிரதமர் மோடியிடம் கடந்த ஆறு மாதங்களில் தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியதாக தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், கடந்த ஆறு மாதங்களில் என் வாழ்க்கை அதிக பொழுதுபோக்கு நிறைந்த ஒன்றாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் நிறைய வெற்றிகள், தோல்விகளை சந்தித்தேன். மக்கள் என்னை திட்டித்தீர்த்தார்கள். நிறைய விஷயங்கள் அரங்கேறிவிட்டன. ஆனால், அவை அனைத்திற்கும் விளையாட்டின் மூலம் தான் பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காக அதிகம் உழைத்துக் கொண்டும், மிகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று நம்பினேன், என்றார்.

பிரதமர் மோடியை சந்தித்த இந்திய வீரர்கள் அதன்பிறகு டெல்லியில் நடைபெற்ற நகர்வலத்தில் கலந்து கொண்டனர். மெரைன் டிரைவில் திறந்தவெளி வாகனத்தில் உலகக் கோப்பையுடன் வலம்வந்த இந்திய வீரர்கள் அங்கிருந்து வான்கடே சென்றனர். வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதை முடித்துக் கொண்ட பிறகு ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

அந்த பதிவில், இந்தியா, நீங்கள் தான் எனக்கு உலகம். என் ஆழ்மனதில் இருந்து உங்கள் அன்பிற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணங்களை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன். மழையை கூட பொருட்படுத்தாமல், எங்களுடன் கொண்டாட வந்தமைக்கு நன்றி. நாங்கள் உங்களை விரும்புகிறோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.

google news
Continue Reading

Cricket

டி20 உலகக் கோப்பை வெற்றி படங்களில் இருக்கும் குங்குமப் பொட்டுக்காரர் யார் தெரியுமா?

Published

on

By

இந்திய டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் வெளியான விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் புகைப்படங்களில் ஒரு குங்குமப் பொட்டுக்காரர் இருப்பதை பார்க்க முடியும். அவர் யார்  என்ற ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அவர் தான் ராகவேந்திரா. சுருக்கமாக ரகு. இவர் குறித்து 2017ம் ஆண்டே முக்கிய வீரரான விராட் கோலி, ரகுவால் தான் என் பேட்டிங் திறன் மேம்பட்டது. உலகின் எந்த ஒரு அதிவேகப் பந்து வீச்சையும் எதிர்கொண்டு விளையாட காரணமே ரகு தான் என பாராட்டியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் கூட ரகு குறித்து பெருமையாகவே பேசி இருக்கின்றனர்.

சின்ன வயதிலே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகமிருந்தவர் வீட்டை விட்டு வெளியேறினார். 21 ரூபாய் பணத்துடன், வீட்டை விட்டு வெளிவந்த ரகு நேராக சென்ற இடம், வட கர்நாடகாவில் உள்ள ஹூப்பாளி என்ற ஊரில் செயல்படும் கர்நாடக மாநில கிரிக்கெட் அகாடமி.

இந்த அகாடமியில் சேர வேண்டும் என்பதே அவர் ஆசை. ஆனால் முதல் வாய்ப்பும் தோல்வி. இருந்தும் அந்த ஊரிலே இருந்து தொடர்ச்சியாக அகாடமி வாய்ப்புக்காக காத்திருந்தார். இப்படியான சூழலில் ஒருநாள் அந்த அணியின் மூத்த பயிற்சியாளர் சிவானந்த் குஞ்சால் ரகுவிற்கு வாய்ப்பு கொடுத்தார்.

இப்படி இருக்க ஒருநாள் பயிற்சி ஆட்டத்தின் போது ரகுவின் கைமுறிந்தது. இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு வந்தார். அப்போதும் மனம் தளாராதவர். விளையாடவில்லை என்றாலும் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். இந்த அகாடமியின் பயிற்சியாளர் ரகுவிடம் நீ நன்றாக பந்தை எறிகிறாய். பெங்களூர் செல் எனக் கூறி த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் எனக் குறிப்பிட்டு கடிதம் கொடுத்தார்.

கர்நாடக மாநில ரஞ்சி டிராபி அணிக்கான த்ரோடவுன் பவுலராக ரகு பணி செய்து கொண்டிருந்தார். 150கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் அவர் பந்துகள். நான்கரை வருடங்கள் ரகு பயிற்சியாளராக இருந்தாலும், இதற்காக ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாகப் பெறவில்லை. அதை தொடர்ந்து 2008களில் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

சச்சின், ராகுல் டிராவிட், தோனி, சேவாக், விராட் கோலி, ரோஹித் சர்மா என அனைவருக்கும் ரகு த்ரோ டவுன் பவுலராக இருந்திருக்கிறார். ஒருகாலத்தில் படுக்க கூட இடம் இல்லாதவர். இன்று இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். நாடு நாடாக அவர்களுடன் சுற்றி வருகிறார். இவரை உலகம் முழுவதும் இருக்கும் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக வரும்படியும், அதற்காக கோடிகளைக் கொட்டித் தரவும் தயாராக இருந்தாலும் ரகு அதை மறுத்துவிட்டார். தான் எப்போதுமே இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதே லட்சியம் எனக் கூறிவிட்டாராம்.

google news
Continue Reading

Cricket

இந்தியா திரும்பிய உடனே மீண்டும் லண்டன் பறந்த விராட் கோலி.. என்ன நடந்தது தெரியுமா?

Published

on

By

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று இந்தியா திரும்பியது. உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு பாராட்டு விழா நடந்த நிலையில் விராட் கோலி உடனே லண்டன் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அதை தொடர்ந்து இந்திய அணிக்கு ஐசிசி டி20 கோப்பை கிடைக்கவில்லை. அதிலும் கடந்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை பைனலில் தோல்வி, ஒருநாள் இறுதி போட்டியில் தோல்வி என இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியாகவே அமைந்தது.

இந்நிலையில் தான் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் தொடங்கி நடந்தது. அதில் இந்திய அணி எல்லா போட்டிகளிலும் வெற்றி கண்டு இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. இதில் தென்னாப்பிரிக்கா 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

இதில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் துல்லியமாக சிக்ஸ் பக்கம் போன பந்தை கேட்சாக பிடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதையடுத்து இந்திய அணி கோப்பையுடன் பார்படாஸில் இருந்து நேற்று இந்தியா திரும்பியது.

காலையில் இந்திய பிரதமர் மோடியை இந்திய அணி சந்தித்தது. அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர். இந்திய வீரர்கள் பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து, இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி உடனே லண்டன் கிளம்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மட்டுமே அனுஷ்கா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

Trending