Categories: Cricketworld cup

இந்த முறை இதற்காவது கப்-ஐ ஜெயிச்சு கொடுங்கப்பா.. சேவாக்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் அரையிறுதி வரை இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது. அந்த வகையில், இந்திய அணி இந்தமுறை கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

தற்போதைய இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை தங்கம் வென்றதில்லை. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பகிர்ந்து கொண்டன. உலகக் கோப்பையை பொருத்தவரை மற்றவர்களை ஒப்பிடுகையில், ராகுல் டிராவிட் ஏராளமான ஏமாற்றங்களை கடந்து வந்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்று போட்டிகளோடு தொடரில் இருந்து வெளியேறியது.

டிராவிட்-இன் நெருங்கிய நண்பர் சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வென்றார். 2011 உலகக் கோப்பை தொடரில் டிராவிட் இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. இதையடுத்து 2012 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடிய ராகுல் அங்கும் வெற்றி வாகை சூடவில்லை.

இதையடுத்து ராகுல் டிராவிட் அண்டர் 19 இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியை தொடங்கினார். இவரது வழிகாட்டுதலில் இளம் இந்திய அணி வெற்றிகளை குவித்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்தினார் ராகுல் டிராவிட். இளம் அணியிடம் கிடைத்த வெற்றி அவருக்கு மூத்த வீரர்கள் அணியிடம் கிடைக்கவில்லை. 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

இதன்பிறகு நடைபெற்ற 2023 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி தொடரிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரே ராகுல் டிராவிட்-க்கு இந்திய தலைமை பயிற்சியாளராக கடைசி தொடர் ஆகும். அந்த வகையில், இந்த கோப்பையை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் வெற்றியுடன் தனது பயிற்சியாளர் பணியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற முடியும்.

இதை நினைவில் கொண்டுள்ள இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், ராகுல் டிராவிட்-க்காக இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்திய கிரிக்கெட்டில் இதுவரை கிடைத்த தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட்.

இது குறித்து விரேந்திர சேவாக் கூறும் போது, 2011 உலகக் கோப்பை தொடரை சச்சின் டெண்டுல்கருக்காக விளையாடினோம். இந்த முறை டி20 உலகக் கோப்பை ராகுல் டிராவிட்-க்காக இருக்க வேண்டும். பயிற்சியாளராகவாவது அவர் உலகக் கோப்பையை பெற வேண்டும், என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…

13 hours ago

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…

15 hours ago

தங்கம் வாங்க நேரம் இது தானா?…வீழ்ச்சியில் விற்பனை விலை…

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…

16 hours ago

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…

16 hours ago

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…

18 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…

18 hours ago