அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் விளையாடி உள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, இந்திய அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதிப்படுத்தியது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் கனடா அணியை இந்தியா எதிர்கொள்ள இருந்தது. எனினும், இந்த போட்டி ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி 47 ரன்களில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து வங்காளதேசம் அணியை 50 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத நிலையில், இந்திய அணியின் டிரெசிங் ரூம் பற்றி ஷிவம் துபே பேசினார்.
டிரெசிங் ரூம் சூழல் தற்போதைக்கு நன்றாகவே இருக்கிறது. நாங்கள் மிகவும் அமைதியாகவும், கவனமான மனநிலையிலும் இருக்கிறோம். இந்த சூழலில் இருக்கும் போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் விழிப்புடன் இருப்பது அவசியம். அணியின் அனைத்து வீரர்கள் மற்றும், உதவியாளர் குழு உள்பட அனைவருக்கும் குறிக்கோள் உள்ளது. ஆனால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக உள்ளனர், என்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…