2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் இதற்காக தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டன. மேலும், பிட்ச்களும் வேறொரு இடத்தில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டன. இதன் காரணமாக அமெரிக்க ஆடுகளங்களில் பிட்ச் மிகவும் மோசமாக உள்ளது என வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள் என பலத்தரப்பினரும் குற்றம்சாட்டினர்.
இதனிடையே நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதுவரை இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. இவை அனைத்திலும் சேர்த்தே விராட் கோலி மொத்தமாக ஐந்து ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் அடங்கும்.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும், விராட் கோலிக்கு ஆதரவாகவும், சிலர் அங்குள்ள பிட்ச்-களை வைத்து விராட் கோலி மட்டுமல்ல எந்த வீரரையும் மதிப்பிட முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன், “எந்தவிதமான பிட்ச்களிலும் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்டர். இதுபோன்ற களங்களில் நீங்கள் ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து, சாத்தியப்படும் ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். செயிண்ட் லூசியாவை தவிர, மற்ற களங்களில் 160-170 ரன்களை அடிக்க முடியும். விராட் கோலி தனது அனுபவம் மூலம் காற்றுவீசும் திசைக்கு மாறாக சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட முடியும்.”
“அமெரிக்கா போன்ற களங்களில் என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. அனைவருக்கும் சாம்பியன்கள் எப்படி சுதந்திரமாக விளையாடுகிறார்கள் என்பதை பார்க்கவே நினைக்கின்றனர். ஆனால் இப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்புகள் குறைவு தான். இதனாலேயே அனுபவம் மிகவும் முக்கியமானது.”
“ஐ.பி.எல். தொடரின் போதே இதுபற்றி நான் பேசி இருக்கிறேன். கோலி ஒரு அணியில் இருந்தால், அவர் துவக்க வீரராகவே களமிறங்க வேண்டும். மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்குவது அவரிடம் இருந்து சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வரும் என்று நான் நினைக்கவில்லை. இதுபோன்ற விக்கெட்டுகளில் எடுத்ததும் 250 ரன்களை விளாசிவிட முடியாது., அவர் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…