2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2.45 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20 கோடியே 42 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
ஐ.சி.சி. தவிர டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சார்பில் தனியே பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. வழங்கும் பரிசுத் தொகை சார்ந்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கோப்பை 2024-ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் இந்த அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது இடம்பிடித்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஐ.சி.சி. சார்பில் 1.28 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 கோடியே 67 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…