டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி இந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். ஐந்து பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி ஹேசில்வுட் வீசிய பந்தை அடிக்க முயன்று டிம் டேவிட் இடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
நடப்பு டி20 தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். அந்த வரிசையில், இன்றைய போட்டியிலும் விராட் கோலி துவக்கத்திலேயே ஆட்டமிழந்ததை அடுத்து, விராட் கோலியை மீண்டும் மூன்றாவது வீரராகவே களமிறக்குங்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதி சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில், முதலில் ஆடிய இந்திய அணி பவர் பிளேயில் மட்டும் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை குவித்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…