டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படோஸில் இருந்து புறப்பட்டுள்ளது. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்கள் நாளை காலை டெல்லி விமான நிலையம் வரவுள்ளனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியினர் தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். எனினும், பார்படோஸில் ஏற்பட்டு இருந்த புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழு மற்றும் இந்திய ஊடகத்தினர் அடங்கிய குழு பார்படோஸில் இருந்து இந்தியா வருகிறது. இதற்காக ஏர் இந்தியாவின் விசேஷ சார்டர் விமானம் AIC24WC (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) விமானம் அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டது.
இந்த விமானம் நாளை (வியாழன் கிழமை) காலை 6.20 மணி அளவில் டெல்லியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தரையிறங்கியதும், இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு நாளை காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய அணியை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து சார்டர் விமானம் மூலம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு மும்பை வரவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்திற்கு செல்லும் இந்திய அணியினர் அங்கிருந்து திறந்தவெளி பேருந்து மூலம் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி செல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் வைத்து மற்றொரு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் வழங்க உள்ளார். இதன் பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி20 உலகக் கோப்பை பிசிசிஐ தலைமையகத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…