நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் ரிங்கு சிங். இவர் தற்போது 19 வது அணிக்கான இந்திய (சீனியர் ஆண்கள்) அணியில் இடம்பிடுத்துள்ள்ளார். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரிங்கு சிங் மிகவும் எமோஷனலாக பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் என்னுடைய எதிர்கால கனவு இந்திய அணிக்காக விளையாடுவது தான்.
நான் இந்திய ஜெர்சியில் கிரிக்கெட் விளையாடும் போது அதனை பார்க்கும் என்னுடைய பெற்றோர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். அவர்கள் தான் என்னை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள். நானும் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடும் போது ஆனந்த கண்ணீரில் அழுவேன் என தோணுகிறது. நான் பொதுவாகவே ஒரு வலிமையான மனநிலைமை கொண்டவன் தான்.
ஆனால், எனக்குள்ளும் சில எமோஷனல் இருக்கும் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒரு தருணம். இன்னும் பலர் நான் அடித்த அந்த சிக்ஸர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால், நான் அதை விட்டு வெளியே வந்து விட்டேன். மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு மிகவும் பெரிய நன்றி. அடுத்ததாக விளையாட உள்ள போட்டிகளில் என்னுடைய முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும், தோனி குறித்து பேசிய ரிங்கு சிங் ” தோனியுடன் நான் பேசிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்கவே மாட்டேன். அவர் என்னுடைய பேட்டிங் அருமையாக இருந்ததாகவும், நான் எப்படி விளையாடுகிறோனோ அப்படியே விளையாடி என்கிற அட்வைஸ் கொடுத்தார். அவரை போல மூத்த வீரர்கள் சொல்லும் அட்வைஸ் நமக்கு பல இடங்களில் உதவும்” எனவும் ரிங்கு சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…