லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு அணியின் முக்கிய வீரர்கள் இறுதிப்போட்டியில் விளையாடாததும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
இதனைத்தொடர்ந்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று காலை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், முதலில் அணியில் அனைவரும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் 100% உடல் நலத்துடன் இருக்க வேண்டும். போட்டியின் பொழுது காயங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம் என்று கூறினார்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடாமல் போய்விட்டனர். எனவே, அடுத்து உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் இவர்களைப் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் விளையாடுவது மிக அவசியம் எனவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…