Cricket
இதுதான் முதல் முறை…ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! முகமது சிராஜ் நெகிழ்ச்சி பேச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் ஐந்து டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதில் இரண்டு டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அருமையாக பந்துவீசி எதிரணியை திணறவைத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அவர் ஐந்து விக்கெட் எடுத்த காரணத்தினால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்றுக் கொண்ட முகமது சிராஜ் போட்டி முடிந்த பிறகு நெகழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய முகமது சிராஜ் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான் முதன் முறையாக ஆட்டநாயகன் விருதை வாங்கியுள்ளேன். இந்த ஆட்டநாயகன் விருது பெற்றவுடன் என்னுடைய மனதில் நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என தோன்றுகிறது. நான் இந்த போட்டியில் என்னுடைய முழு பங்களிப்பை கொடுத்ததாக இப்போது நான் உணர்கிறேன் .
அடுத்ததாக வரும் போட்டிகளில் நன்றாக பந்து வீச இந்த ஆட்டநாயகன் விருது எனக்கு நம்பிக்கை வழங்கி உள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா என்னிடம் நீங்க எப்போதும் போல இயல்பாகவே பந்த வீசு என எனக்கு ஆறுதல் கூறினார். அவருடைய அறிவுரையும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
ரோகித் சர்மா கூறியபடியே எந்த பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் பந்தை சரியாக வீசினேன் எனக்கு விகெட்களையும் விழுந்தது. மொத்தத்தில் எனக்கு இந்த ஆட்டநாயகன் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.