மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று அரைசதங்கள் அடித்து இளம் வீரர் இஷான் கிஷன் தற்போது பயங்கர ஃபார்மில் உள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் காரணமாக, இந்தியா தொடரை 2-1 என வென்றது. இவர் அருமையாக விளையாடும் காரணமாக இந்தியா அடுத்தடுத்து விளையாடும் போட்டிகளில் அவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் இஷான் கிஷன் பேட்டிங் பற்றி பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேட்டிங் பற்றி பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “இஷான் கிஷனின் ஆட்டம் கடந்த சில போட்டிகளில் அருமையாக இருந்தது ஆனால் அவருடைய அரசியல் மட்டும் இந்திய அணிக்கு போதாது அதைப்போல் அவருக்கும் போதாது.
அவர் எந்த அளவிற்கு அருமையாக விளையாடி அரை சதம் விலாசி உள்ளாரோ அதே அளவிற்கு சதம் அடிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரோகித் சர்மா விராட் கோலி போன்ற பெரிய வீரர்கள் அருமையாக விளையாடி சதாம் விளாசுவார்கள். எனவே அவர்களிடம் அறிவுரையை கேட்டு இஷான் கிஷனும் சதம் அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய பேட்டிங் பற்றி நான் எந்த குறையும் சொல்லவில்லை ஆனால் அவரின் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அருமையாக விளையாடி அதன் காரணமாக அடுத்ததாக இந்திய அணி விளையாட போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இது எல்லாம் கருத்தில் கொண்டு இஷான் கிஷன் நன்றாக விளையாட வேண்டும். அப்படி விளையாடினார் என்றால் மட்டுமே அவருக்கு அதிகமாக பாராட்டுகள் கிடைக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.” என தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…