இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்து வீசி 12 விக்கெட்டை வீழ்த்தி பல சாதனைகளை படைத்தார். ஒரு இன்னிங்கிஸில் 5 விக்கெட்களும், மற்றோரு இன்னிங்கிஸில் 7 விக்கெட் என மொத்தமாக ஒரே டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அஷ்வின் தனது பந்துவீச்சின் சீக்ரெட் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசி அவர் “பொதுவாக நான் ஒரு போட்டியில் கலந்து கொண்டு பந்துகளை வீசும் போது நான் ஒரு பேட்ஸ்மனாக என்னை உணர்ந்து கொண்டு தான் பந்தை வீசுவேன். ஒரு சில ஓவர்கள் கடந்து சென்ற பிறகுதான் எனக்கு சரியாக பந்து வீசப்படும் அதாவது என்னுடைய ரீதத்தை நான் அப்போது தான் பிடிப்பேன். பந்து வீசும்போதே யோசித்துக் கொண்டே இருப்பேன். எந்த மாதிரி திசைகளில் பந்துகளை கட் செய்யலாம் என்று.
நான் ஸ்பின்பால், ஓவர் ஸ்பின், டாப்ஸ்பின் என எல்லா விதமான பந்துகளையும் பேட்ஸ்மேன்க்கு எதிராக மைதானத்தில் பயன்படுத்திக் கொண்டே இருப்பேன். நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக யோசிப்பது எதற்காக வென்றால் ஒரு பேட்ஸ்மேன் ஆக முனையில் நின்று கொண்டு அந்த பந்தை எதிர்கொள்ள காலை எந்த திசையில் நகர்த்தவேண்டும் எங்கு நகர்த்த கூடாது என்பது அப்படி யோசித்தால் தெரியும்.
எனவே, அதனால் நான் அப்படி என்னை பேஸ்ட்மேனாக யோசித்துக்கொண்டு பந்துவீச்சில் செயல்படுவேன். அவர்கள் எங்கு ரண்களை குவிக்க ஆசைப்படுகிறார்கள் என்பது எனக்கு தெளிவாக தெரியும். எனவே, என்னுடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களின் மனநிலையை நான் முழுவதுமாக தெரிந்து கொண்டு அந்த பந்தை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு நான் பந்து வீசுவேன்” என கூறியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…