ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் அய்யர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அந்த தொடரில் லங்காஷயர் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் அய்யர், நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தது அவரது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
வொர்கர்ஸ்டர்ஷயர் மற்றும் லங்காஷயர் அணிகள் மோதிய போட்டியில் வொர்கஸ்டர்ஷயர் அணி 12 பந்துகளில் 16 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது 49 ஆவது ஓவரை வீசிய வெங்கடேஷ் அய்யர் முதல் இரண்டு பந்துகளில் லெக் பை பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகள் வைடு ஆக அந்த அணி பத்து ரன்களை எடுத்துவிட்டது.
முதலில் அதிக ரன்கள் கிடைத்துவிட்ட போதிலும், நம்பிக்கையை இழக்காத வெங்கடேஷ் அடுத்தடுத்து வீசிய பந்துகளில் விக்கெட்டுகளை எடுத்தார். ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வெங்கடேஷ் அய்யர் வீழ்த்திய நிலையில், லங்காஷயர் அணி போட்டியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
முன்னதாக லங்காஷயர் பேட்டிங் செய்த போது, வெங்கடேஷ் அய்யர் 42 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். இந்த அணி முதில் பேட் செய்து 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணிக்கு கேப்டன் ஜோஷ் பொஹனான் அதிகபட்சமாக 123 பந்துகளில் 87 ரன்களையும், ஜார்ஜ் பால்டர்சன் 44 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
பந்துவீச்சின் போது வெங்கடேஷ் அய்யர் ஆறு ஓவர்களை வீசிய நிலையில், 38 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவர் தவிர லங்காஷயர் அணிக்கு ஜோஷூவா போடன் நான்கு ஓவர்களை வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…