இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இலங்கையின் கொலம்போ விமான நிலையத்தில் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க கொலம்போ விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் ரசிகர்களை கண்ட விராட் கோலி முகம் முழுக்க சிரிப்புடன் காணப்பட்டார். மேலும், அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். விமான நிலையம் வந்த விராட் கோலி செக் இன் செய்ய வரிசையில் காத்திருந்தார். முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயஸ் அய்யர், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்சித் ரானா ஆகியோர் கொலம்போ விமான நிலையம் வந்தனர்.
முதல் ஒருநாள் போட்டியை ஒட்டி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பயிற்சியை துவங்க உள்ளனர். இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும் விளையாடுவது உறுதியானது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
முன்னதாக மூத்த வீரர்கள் அதிகம் இடம்பெறாத டி20 அணி இலங்கையை எதிர்த்து டி20 தொடரில் விளையாடியது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய டி20 அணி முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
மேலும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலியை சமன் செய்து அசத்தினார். அதுவும் விராட் கோலியை விட பாதி இன்னிங்ஸில் விளையாடி இந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…