Categories: Cricket

துலீப் கோப்பையில் கோலி, ரோகித் விளையாடனுமா? சுரேஷ் ரெய்னா சொன்னது இதுதான்..!

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகமுக்கிய தொடராக துலீப் கோப்பை உள்ளது. துலீப் கோப்பையில் சிறந்து விளையாடும் வீரர்கள் எளிதில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.

துலீப் கோப்பை தொடரில் இந்த முறை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிச்சயம் விளையாடுவார்கள் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனிநும், கடைசி நேரத்தில் இருவரும் நேரடியாக வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குவர் என்ற நிலைப்பாட்டை பிசிசிஐ எடுத்தது. முக்கிய வீரர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அழுத்தம் கொடுப்பது சரியில்லை என்று தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தெரிவித்தார்.

இந்த நிலையில், துலீப் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடி இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப இன்னும் சிறப்பாக தயாராக முடியும் என்று அவர் தெரிவித்தார்.

“ஆம், அவர்கள் விளையாடி இருக்க வேண்டும், ஐபிஎல் முடிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மிகமுக்கிய டெஸ்ட் தொடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதால், ஒருவர் நான்கு நாட்கள் நடைபெறும் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இவ்வாறு செய்வதால் போட்டியின் நான்காவது நாள் விக்கெட் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.”

“நான்கு-ஐந்து நாட்கள் அணியுடன் இருப்பது, பிறகு பயிற்சியை துவங்கினால் அவர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு ஏற்ப இருவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று நான் நினைக்கிறேன். சமயங்களில் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதும் முக்கியம்தான்.”

“அக்டோபரில் விக்கெட் உறுதியாக இருக்கும் காலக்கட்டத்தில் அவர்கள் கான்பூரில் விளையாடும் போது டியூ காரணமாக சுழல் அந்த அளவுக்கு இருக்காது. அந்த மைதானம் கங்கை ஆற்றுக்கு அருகாமையிலேயே உள்ளது. இதனால், காலையில் சற்று குளிராகவே இருக்கும். வானிலை படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கும்.”

“வங்கதேசம் அதனை எதிர்கொள்ள வேண்டும். இந்திய அணி பலம் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வங்கதேசம் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. சமீபத்தில் வங்கதேசம் அணி பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறது. நல்ல வேளையாக நல்ல கிரிக்கெட் பார்க்கும் சூழல் உருவாகலாம்,” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago