இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள், சக வீரர்கள் மற்றும் பலர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்து கொண்ட விராட் கோலி அதன்பிறகு குடும்பத்தோடு லண்டனில் வசித்து வருகிறார். விராட் கோலி அவ்வப்போது லண்டன் வீதிகளில் கூலாக வலம் வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
அந்த வரிசையில், விராட் கோலி ரெயிலில் புறப்பட ஆயத்தமான போது, ரசிகர்கள் அவரை சூழ்ந்த சம்பவம் அரங்கேறியது. விராட் கோலியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார். இதை கோலியிடமும் அவர்கள் கோரிக்கையாக தெரிவித்தனர்.
எனினும், அவசராக செல்ல வேண்டும் என்பதை உணர்த்தியவராக விராட் கோலி காணப்பட்டார். ஆனாலும், ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், கோலி அவர்களிடம் குழுவாக ஒரே புகைப்படம் எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார். அவ்வாறு புகைப்படம் எடுத்த பிறகு விராட் கோலி அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ரெயில் நிலையத்திற்கு வந்த விராட் கோலி ஹசெல்நட் நிற ஹூடி, கருப்பு நிற டிராக் பேண்ட் மற்றும் வெள்ளை நிற ஸ்நீக்கர்களை அணிந்து இருந்தார். ஷட்டில் வாகனத்தில் ரெயில் நிலையம் வந்த விராட் கோலியை, லண்டனில் உள்ள அவரது ரசிகர்கள் கன நேரத்தில் அடையாளம் கண்டது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…