Connect with us

Cricket

மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை அணி சாம்பியன்

Published

on

இலங்கையில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு துவக்க வீராங்கனை ஷஃபாளி வெர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். அடுத்து வந்து வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜெர்மியா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் முறையே 29 மற்றும் 30 ரன்களை குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது.

இலங்கை சார்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், உதெஷிகா பிரபோதனி, சச்சினி நிசன்சலா மற்றும் சமாரி அட்டப்பட்டு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 166 ரன்களை துரத்திய இலங்கை அணியின் விஷ்மி குனரத்னே 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்படு 43 பந்துகளில் 61 ரன்களை எடுத்தார். இவருடன் விளையாடிய ஹர்ஷிதா சமரவிக்ரம 51 பந்துகளில் 69 ரன்களை அடித்தார். அடுத்து வந்த கவிஷா தில்ஹாரி 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன் மூலம் இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 167 ரன்களை துரத்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி முதல் முறையாக ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news