சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிர் டி20 கிரிக்கெட் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 12 ஆவது இடத்திற்கும், ஷஃபாலி வெர்மா 15 ஆவது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இருவரும் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து, இவர்கள் பட்டியலில் முன்னேற்றம் கண்டனர்.
613 புள்ளிகளை பெற்றுள்ள ஹர்மன்பிரீத் கௌர் மூன்று இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்தில் உள்ளார். ஷஃபாலி வெர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் மற்றும் இங்கிலாந்து அணியியன் டேனி யாட் ஆகியோருடன் 15 ஆவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
ஐசிசி டி20 வீராங்கனைகள் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தீப்தி ஷர்மா மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். ராதா யாதவ் எட்டு இடங்கள் முன்னேறி 15 ஆவது இடத்தில் உள்ளார்.
பூஜா வஸ்ட்ராக்கர் ஆறு இடங்கள் முன்னேறி 23 ஆவது இடத்திலும் ஷ்ரேயங்கா பாட்டில் ஒன்பது இடங்கள் முன்னேறி அறுபதாவது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாரா கிளென் 768 புள்ளிகளை பெற்று புதிய உச்சம் தொட்டார். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரின் நான்கு போட்டிகளில் இதுவரை எட்டு விக்கெட்டுகளை வீழத்தி உள்ளார்.
இதன் மூலம் அவர் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சோஃபி எக்ளெஸ்டோன் உள்ளார். இவர் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மட்டும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…