Connect with us

Cricket

சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், கில்லிடம் என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்களை விளாசி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் களத்தில் மோசமாக நடந்து கொண்டார் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஜெய்ஸ்வால் எளிதில் சதம் அடிக்கும் சூழல் உருவாகி இருந்த போதிலும், சுப்மன் கில் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல், சுயநலமாக செயல்பட்டு அரைசதம் கடந்து போட்டியை முடித்துவிட்டார் என்று அவர்கள் வலைதளங்களில் பதிவிட்டனர்.

சுப்மன் கில் செயல் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜெய்ஸ்வால் முதல்முறை மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெய்ஸ்வால், நாங்கள் இருவரும் போட்டியை விக்கெட் இழப்பின்றி முடித்து, பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினோம், என்று தெரிவித்தார்.

இந்திய அணிக்கு அதிரடி துவக்கம் கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்கர்களும் அடங்கும். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரும், கேப்டனுமான சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்களை அடித்தார்.

google news