இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டொமினிகாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா அருமையாக விளையாடி வருகிறது. இந்தியா முதல் நாளில் பேட் மற்றும் பந்து இரண்டிலும் அட்டகாசமாக செயல்பட்டது.
முதலில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். இதன் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன் களுக்கு மொத்தமாக ஆட்டமிழந்தது. பின்னர் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுக்காமல் 80 ரன்களை குவித்துள்ளனர். 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது அறிமுக ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் (63 பந்தில் 30*) 73 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியின் மூலம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இந்த முதல் போட்டியிலே அவர் அருமையாக விளையாடிய காரணத்தால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நேற்றைய போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் அருமையாக விளையாடினார். அவருடைய விளையாட்டு பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.
அவர் படிப்படியாக இப்போது அரைசதத்தை கடக்க வேண்டும். அந்த ஒரு நோக்கம் மட்டும் தான் அவருடைய மனதில் இருக்கவேண்டும். பிறகு அரைசதத்தை கடந்த பிறகு சதத்தை அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாட வேண்டும். அவர் சதம் அடிக்க அவருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. கண்டிப்பாக அவர் சதம் அடிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன். முதல் போட்டியில் சதம் அடித்தால் அதுவே பெரிய சாதனை தான்” எனவும் இஷாந்த் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…