அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே சார்பில் ஜாய்லார்ட் கும்பீ 49 ரன்களையும், பிரின்ஸ் மசாவர் 74 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 35 ரன்களையும், டியன் மையர்ஸ் 10 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். மற்ற வீர்ர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்ப்ரின் மற்றும் பேரி மெக்கார்த்தி தலா மூன்று விக்கெட்டுகளையும், மார்க் அடைர் 2 விக்கெட்டுகளையும், கிரைக் யங் மற்றும் கர்டிஸ் காம்ஃபர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் 79 ரன்களையும், ஆண்டி மெக்பிரைன் 28 ரன்களையும், மேத்யூ ஹம்ப்ரேஸ் 27 ரன்களையும், பால் ஸ்டிர்லிங் 22 ரன்களையும், கேப்டன் ஆன்டி பால்பிர்னி 19 ரன்களையும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும், ஜிம்பாப்வே அணி கொடுத்த எக்ஸ்டிரா ரன்களால் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் எக்ஸ்டிரா மட்டும் 59 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டன.
இதில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே மட்டும் 42 ரன்களை பை என்ற முறையில் விட்டுக் கொடுத்தார். எக்ஸ்டிரா ரன்களை தவிர்த்து இருந்தால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வே அடித்த ரன்களை கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்து இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் மடாண்டே பை மூலம் 42 ரன்களை விட்டுக் கொடுத்ததன் மூலம் 90 ஆண்டுகள் சாதனையை முறியடித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக பை ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் லேஸ் ஆமெஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1934 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 37 பை ரன்களை விட்டுக் கொடுத்தது மோசமான சாதனையாக இருந்து வந்தது.
கிளைவ் மடாண்டேவுக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டி என்ற வகையில், அவர் இத்தகைய மோசமான சாதனையை படைத்துள்ளார். மேலும், முதல் இன்னிங்ஸில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…