Categories: Finance

நேரடியாக அக்கவுண்டிற்கே வரும் பிஎப் பணம்… உடனே சரிபார்க்க சூப்பர் டிப்ஸ்

வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2024-25 நிதியாண்டுக்கான வட்டி தொகையை பயனாளிகள் கணக்கில் வரவு வைக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், சில பயனாளிகள் கணக்குகளில் வட்டித் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிஎப் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு வட்டி கணக்கிடுகிறது. ஆனால், வட்டித் தொகை ஆண்டு இறுதியில் தான் வரவு வைக்கப்படுகிறது. இந்த வட்டி ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் என இருவரின் பங்களிப்பு அடிப்படையில் செலுத்தப்படும்.

புதிய தகவல்களின் படி உங்களது பிஎப் வட்டி தொகை உங்களின் கணக்கிற்கு வந்துள்ளதா, இல்லையா என்பதை நீங்களாகவே சரிபார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இதை செய்வதற்கு எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டு கால் மற்றும் UMANG செயலி பயன்படுத்தலாம். இவற்றை கொண்டு பிஎப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை சரிபார்க்கலாம்.

பிஎப் தொகையை ஆன்லைனில் அறிந்து கொள்வது எப்படி?

ஆன்லைனில் சரிபார்க்க பயனர்கள் முதலில் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.

பிறகு உங்களது UAN எண் மற்றும் கடவுச்சொல் பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

இனி பாஸ்புக் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

முகப்பு பக்கத்தில் உள்ள உறுப்பினர் ஐடியை திறந்தால், பிஎப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை பார்க்க முடியும்.

UMANG ஆப் மூலம் அறிந்து கொள்வது எப்படி?

முதலில் UMANG செயலியில் உள்நுழைய வேண்டும்.

இனி EPFO ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து பணியாளர் மைய சேவைக்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

உங்களது UAN எண் மற்றும் கடவுச்சொல் பதிவிட்டு View Passbook ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிட வேண்டும்.

இனி உங்களது பிஎப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை பார்க்க முடியும்.

எஸ்எம்எஸ் வசதி:

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து EPFOHO UAN என்று டைப் செய்து 77382 99899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு செய்ததும் எஸ்எம்எஸ் மூலம் உங்களது பிஎப் கணக்கில் உள்ள தொகையை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் உங்களுக்கு வரும்.

இந்த வசதியை பயன்படுத்தும் முன் உங்களது மொபைல் நம்பர் பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதுதவிர பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-2290 1406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இப்படி செய்ததும் உங்களது பிஎப் கணக்கில் உள்ள தொகையை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் உங்களுக்கு அனுப்பப்படும்.

admin

Recent Posts

Gemini- Siri: கைகோர்க்கும் இரண்டு ஜாம்பவான்கள்.. கைகூடுமா திட்டம்?

ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…

1 day ago

ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த Sean Williams.. என்ன நடந்தது?

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…

1 day ago

ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துருச்சு OpenAI Sora.. இந்தியாவுக்கு எப்போ வரும்?

OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…

1 day ago

iPhone 16 Plus: ஜியோ மார்ட்டின் அதிரடி விலைக்குறைப்பு… எவ்வளவு தெரியுமா?

ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…

1 day ago

Google chrome பயனாளர்களுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…

2 days ago

ISRO-வின் 4 டன் Bahubali ராக்கெட் – என்னவெல்லாம் ஸ்பெஷல்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…

3 days ago