இந்திய வங்கிகள் அவ்வப்போது தனது சேவை கட்டணங்களில் திருத்தம் செய்வது வாடிக்கையான விஷயம் தான். இதற்கு ரிசர்வ் வங்கியும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு வங்கிகள் தங்களது சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைப்பது இயல்பு தான். அந்த வரிசையில், இந்தியாவில் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ (ICICI) கட்டண மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கட்டண மாற்றம் வருகிற ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு காரணமாக டிமாண்ட் டிராப்ட்கள், ஏடிஎம் பரிவர்த்தனைகள், ரொக்க வைப்பு மற்றும் திரும்ப பெறும் சேவைகள், டெபிட் கார்டு தொடர்பான கட்டணங்கள் என பலவித சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றப்படுகிறது.
மாற்றப்பட்டுள்ள கட்டணங்கள் வங்கி சேவையை பயன்படுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு முன்கூட்டியே இதுப்பற்றிய எச்சரிக்கை கொடுக்கவும் வங்கிகள் கட்டண மாற்றம் குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுகின்றன.
சேவை கட்டண மாற்றம்:
ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள புதிய கட்டண மாற்றத்தில் டிமாண்ட் டிராப்ட் எனப்படும் DD கட்டணங்கள்- ரொக்கம், காசோலை அல்லது பரிமாற்ற கட்டண முறையில் வழங்கப்படும் டிமாண்ட் டிராப்ட் கட்டணம் ரூ. 1,000-க்கு ரூ. 2 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும் ஒரு பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 என்றும் அதிகபட்ச வரம்பு ரூ. 15,000 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா என பெருநகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மாதம் மூன்று முறை இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இதற்கும் மேல் பணம் எடுக்காத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 8.5, நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ. 23 கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் பெருநகரங்கள் இல்லாத இடங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
இதை மீறிய பண பரிவர்த்தனைகளுக்கு ரூ. 23 என்றும் பணம் எடுக்காத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 8.5 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம்களிலும் இலவச பரிவர்த்தனைகளுக்கான மொத்த எண்ணிக்கை ஐந்து என வரையறுக்கப்ப்டுள்ளது. இதில் பெருநகரங்களில் அனுமதிக்கப்படும் மூன்று பரிவர்த்தனைகளும் அடங்கும்.
சர்வதேச ஏடிஎம்கள் அதாவது இந்தியாவுக்கு வெளியில் உள்ள ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 125 வசூலிக்கப்படும். கூடுதலாக 3.5 சதவீதம் நாணய மாற்ற செலவும் விதிக்கப்படும். பணம் எடுக்காத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 25 என மாற்றப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு மட்டும் இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதர வங்கி சேவை கட்டண மாற்றங்கள்:
உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) வெளிப்புற பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனை செய்யும் தொகையை பொருத்து கட்டணம் விதிக்கப்படும். ரூ. 1000 அனுப்புவதற்கு ரூ. 2.50 வசூலிக்கப்படும். ரூ. 1,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ. 5,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ. 15 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளில் இருந்து பணம் எடுக்க மூன்று முறை இலவசம். இதை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 150 செலுத்த வேண்டும். மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக பணம் எடுக்கும் போது ரூ. 1000-க்கு ரூ. 3.5 அல்லது ரூ. 150 ஆக எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ அது வசூலிக்கப்படும்.
வழக்கமான டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர கட்டணம் ரூ. 150 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெபிட் கார்டு தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ மாற்று டெபிட் கார்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 300 ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…