பொதுவாக ஒரு மனிதன் எவ்வளவு தான் உழைத்தாலும் அவனுக்கு, கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும். அது பணமாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி, புகழாக இருந்தாலும் சரி. இது பற்றி முன் காலத்தில் அதிகமாக சொல்லப்பட்ட பழமொழி ‘எவ்வளவு உருண்டாலும், ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்’. எவ்வளவு தான் அயராது உடல் நோக உழைத்தாலும் அதற்கு நிகரான வெகுமதி கிடைக்குமா? என்று பார்த்தால் அது சிலருக்கான ப்ராப்தமாகவே இருந்து வருகிறது.
நேரம் கூடி வந்தால் தடை பட்ட காரியங்கள் கூட எந்த சிரமத்தையும் கொடுக்காமல் தானாகவே நடந்து விடும். கொடுக்க தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பதும் பழமொழி. விதிப்பலன்களை நம்புபவர்கள் எல்லோரும் இந்த பழமொழிகளை ஏற்றுக் கொள்வார்கள். இவருக்கு இதன் மூலம் தான் அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்று இருந்தால் அது நடந்த தீரும்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஆந்திர மாநில மீனவர் ஒருவருக்கு நடந்துள்ளது. ஆந்திரா மசூலிப்பட்டிண கடலில் மீனவர் ஒருவர் எப்போதும் போல கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். மீன் பிடிக்க தனது வலையை கடலில் விரித்திருக்கிறார் அந்த மீனவர். வலைக்குள் ஏதோ ஒன்று சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் வலையை வெளியில் இழுத்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு அதிர்ஷ்டத்தின் மறு வடிவமான காட்சி ஒன்று வலையில் தென்பட்டுள்ளது.
இழுக்க முடியாத அளவில் வலை இருந்ததால் க்ரேன் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்திருக்கிறார். வலைக்குள் சிக்கி இருந்தது தேக்கு வகை மீன். அந்த ராட்சத மீனின் எடை ஆயிரத்து ஐனூறு கிலோவாக இருந்திருக்கிறது. மருத்துவ குணம் அதிகம் கொண்ட மீன் வகை அது என்பதால், இது பற்றி கேள்விப்பட்ட சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த மீனை நாலு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ராட்சத தேக்கு வகை மீனை க்ரேன் கொண்டு இழுத்து வரும் வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…