தற்போதைய காலத்தில் தேர்தலில் வாக்கு அளிக்க எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு இருப்பதாக எதிர்கட்சிகள் புகார் அளித்து வருகிறது. ஆளும் மத்திய அரசு இவிஎம் மெஷினில் எந்த கோளாறும் இல்லை எனவும் கூறிவந்தது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்டா சிஇஓ ஆன எலான் மாஸ்க் இவிஎம் மெஷின்களை ஏஐ மூலம் ஹேக்கிங் செய்ய முடியும் என்பதால் அதை ஒழிக்க வேண்டும் எனக் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கூறி இருந்தார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு முன்னாள் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இவிஎம் மெஷின்களை ஹேக் செய்ய முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கருத்து சரியாக இருக்கலாம். அங்கு இவிஎம் மெஷின்கள் இணையத் தொடர்பு கொண்டிருக்கும்.
ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இங்குள்ள இவிஎம் மெஷின்கள் எந்த ஒரு கருவியுடன் இணைக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். ராஜீவ் சந்திரசேகரின் கருத்துக்கு எலான் மஸ்க் எந்த கருவியையும் ஹேக் செய்ய முடியும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியமாக இந்திய கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் இவிஎம் மெஷின்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவிஎம் மெஷின்களை அகற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், இவிஎம் மெஷின்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தும் தேர்தல் ஆணையம் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. மோசடி செய்து ஜனநாயகத்தினை காலி செய்யும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…