Categories: job news

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 25 பணியிடங்கள்..! நேர்காணல் முறையில் வேலை..உடனே முந்துங்க..!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI-Airports Authority of India), ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு தபால் மூலம் விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடம்: 

சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Security Screener) பணிக்கு காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனதிலிருந்து, 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லுபடியாகும் BCAS அடிப்படை AVSEC சான்றிதழ் மற்றும் குறைந்தபட்சம் 30.09.2023 வரை செல்லுபடியாகும் BCAS ஸ்க்ரீனர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • ஆங்கிலம், ஹிந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியைப் படிக்கும்/பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

AAI Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்து, தகுதி, அடையாள சான்று, முகவரி விவரங்கள், அடிப்படை விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.
  • OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இந்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பிற்கான தகுதிவாய்ந்த ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை நிரப்பிய பின், விண்ணப்பதாரர் கீழே உள்ள தேதி, நேரம் மற்றும் இடத்தில் நேர்காணலுக்கு வர வேண்டும்.
  • நேர்காணலுக்கு வரும்பொழுது பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
  • நேர்காணல் இடம் – Security Screener (Raipur Airport): Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur–492015.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர் நிரப்பிய விண்ணப்பங்களுடன் ஜூன் 12ம் தேதி நேர்காணலுக்கு வர வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ https://www.aai.aero/en/careers/recruitment இணையதளம் மற்றும் Notification  அறிவிப்பை அணுகலாம்.

AAI Recruitment 2023

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

4 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

4 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

4 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

4 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

4 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

4 weeks ago