Categories: job news

மாதம் 35,000 சம்பளத்தில் திருச்சியில் வேலை..! இன்றே விண்ணப்பிங்க..!

வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம் 21 ஆகஸ்ட் 1993 அன்று திருச்சிராப்பள்ளியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICAR) நிறுவப்பட்டது. இது வாழை மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தித்தியை ஆராய்ச்சி அணுகுமுறைகள் மூலம் அதிகரிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

தற்பொழுது, வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (National Research Centre for Banana Trichy) காலியாக உள்ள பணிக்கு ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், வேட்பாளர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

பதவி விவரம்:

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (National Research Centre for Banana Trichy) காலியாக இளம் நிபுணர்-II (Young Professional-II) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஒரு பணியிடம் மட்டுமே உள்ளது. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பதவிக்கான தகுதிகள்:

இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பவர் தோட்டக்கலையில் எம்.எஸ்சி அல்லது வேதியியல் பொறியியல்/வேளாண் பொறியியலில் எம்.டெக். அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது:

இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பவரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 45 ஆகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு https://nrcb.icar.gov.in/job-opportunities.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE-ல் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை நேர்த்தியாக தட்டச்சு செய்து, கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் வெளியீடுகள் போன்றவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் சம்பளம்:

இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 12 ஆகும். இதற்கு தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ .35,000 ஊதியமாக வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு  Notification அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லது https://nrcb.icar.gov.in/job-opportunities.php என்ற இணையதளத்தை அணுகலாம்.
Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago