job news
மாதம் 67 ஆயிரம் சம்பளம்..தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஜெனரல் மேனேஜர் வேலை..! இன்னும் எதுக்கு வெயிட் பண்ணுறீங்க..!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1988ம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது. NHAI தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் ஒரு மத்திய ஆணையமாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, NHAI காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலியாக உள்ள பொது மேலாளர் (தொழில்நுட்பம்) பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறித்து குறிப்பிடப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பதாரரின் தகுதி குறித்த தகவல் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் nhai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அங்கு உள்ள Application Form விண்ணப்பப் படிவத்தைப் நிரப்ப வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்பி, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படுவதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்பபடிவத்தை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.