Categories: job news

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்…! என்எல்சியில் 500 பேருக்கு வேலை..மிஸ் பண்ணிடாதிங்க..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி அலகுகளில் பயிற்சி அளிப்பதற்காக, தகுதியுள்ள நபர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

என்எல்சி நிறுவனத்தில் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்:

என்எல்சி நிறுவனம் தொழில்துறை பயிற்சியாளர் (Industrial Trainee) பணியில்  காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

NLC Recruitment

விண்ணப்பதாரர் வயது:

தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 37 முதல் 42 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

NLC Recruitment

விண்ணப்பதாரர் தகுதி:

  • தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 3 ஆண்டு கால இன்ஜினியரிங் படிப்பில் முழு நேர டிப்ளமோ  முடித்திருக்க வேண்டும்.
  • ஐடிஐ – ஃபிட்டர் அல்லது டர்னர் அல்லது எலக்ட்ரீசியன் அல்லது வெல்டிங் அல்லது எம்எம்வி அல்லது டீசல் மெக்கானிக் அல்லது டிராக்டர் மெக்கானிக் அல்லது சிவில் அல்லது ஃபவுண்டரி அல்லது கேபிள் இணைப்பு வர்த்தகம் என்ஏசி சான்றிதல் வைத்திருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் என்எல்சி இந்தியா லிமிடெட் இணையதளமான www.nlcindia.in இல் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தங்களிடம் செயலில் உள்ள மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
  • ஏனெனில் என்எல்சிஐஎல் பயிற்சி தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளையும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • அனைத்து சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், வயது, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்ற ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்ற வேண்டும், தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • தேவையான சான்றிதழ்களை பதிவேற்றிய பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து, சான்றிதழ்கள் / ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், ஆவணம் / சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் பணிக் காலம் :

தொழில்துறை பயிற்சிக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படும்.

சம்பள விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யட்டும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.14,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படும்.

NLC Recruitment

கடைசி தேதி:

விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தை நாளை அதாவது ஜூன் 9ம் தேதியிலிருந்து ஜூலை 8ம் தேதிக்கு முன்னதாக, அனைத்து ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

NLC Recruitment

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

5 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

6 hours ago