Categories: job news

மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஐஐடி மெட்ராஸ்-ல் வேலை..! மிஸ் பண்ணாதீங்க..!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Chennai Indian Institute of Technology – IIT Madras), தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும்.

ஐஐடி மெட்ராஸ் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

ஐஐடி மெட்ராஸ் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் (Research Associate) பணியை தற்காலிக முறையில் நிரப்ப உள்ளது. இதற்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

ரிசர்ச் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறித்த தகவல் அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • M.Ed., MPhil / PhD முடித்திருக்க வேண்டும் அல்லது,
  • மனிதநேயம் அல்லது சமூக அறிவியல் துறைகளில் M. Phil / PhDமுடித்திருக்க வேண்டும் அல்லது,
  • அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பாடங்களில் MSc/MTech/PhD (எ.கா., பொறியியல், இயற்பியல், வேதியியல், முதலியன)

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஒரே பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பிக்க முயற்சிக்கக் கூடாது.
  • ஒரே பதவிக்கான விண்ணப்பதாரரிடம் இருந்து பல விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் சரியான மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளை ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அனைத்து கடிதங்களும் நிறுவனத்தால் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி மூத்த திட்டப் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்.
  • நேர்காணலுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

ரிசர்ச் அசோசியேட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும். இந்த பதவியில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு icandsr.iitm.ac.in அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago