job news
மாதம் ரூ.10,000 சம்பளத்தில் வேலை..! 8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பீங்க.!!
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவும் மையம் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (One Stop Centre) முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு பாதுகாவலர் பணியிடத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த மகளிர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள்:
மேற்கண்ட இந்த பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கல்விதகுதி:
இந்தப் பணியில் சேர நீங்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அப்படி தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
சம்பளம்:
இந்த பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தவுடன் அவர்களில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி:
நிர்வாக அமைப்பின் கீழ் ஒருவருடம் அனுபவமுள்ள பணிபுரிந்த உள்ளுரை சார்ந்த மகளிராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் அமர்த்தப்படும். பணி
விண்ணப்பிக்கும் முறை:
- இந்தப் பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் விண்ணப்பங்களை நாகப்பட்டினம் மாவட்டம் இணையதளத்திற்கு www.nagapattinam.nic.in சென்று அங்கு இருக்கும் விண்ணப்பபடிவத்தை Application Form பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்க பிரிவு -2, தரைத்தளம், கோட்ட அலுவலக வளாகம், புதியக்கடற்கரை சாலை, காடம்பாடி, நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு ஜூலை 7ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.