Categories: job news

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..! மாதம் ரூ.15,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தால் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

  • அலுவலக உதவியாளர் / எழுத்தர்
  • வரவேற்பாளர் – கம்-டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
  • அலுவலக பியூன்

விண்ணப்பதாரர் வயது:

மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

அலுவலக உதவியாளர் / எழுத்தர்:

ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அடிப்படை சொல் செயலாக்கம், திறன்கள் மற்றும் கணினியை இயக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 40 WPM. டிக்டேஷன் எடுத்து தரவை உள்ளிடும் திறன். கோப்பு பராமரிப்பு மற்றும் செயலாக்க அறிவு திறன் கொண்டிருக்க வேண்டும்.

DLSA Virudhunagar Recruitment

வரவேற்பாளர் – கம்-டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்:

ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன் கொண்டிருக்க வேண்டும். தொலைத்தொடர்பு அமைப்புகளில் வேலை செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

DLSA Virudhunagar Recruitment

அலுவலக பியூன்:

8ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக நேரம் தொடங்கும் முன் அலுவலகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். அலுவலகத்தில் அனைத்து இடங்களும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்தல். அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு தண்ணீர், பானங்கள் கொண்டு வந்து வழங்குதல். சட்ட சேவைகள் ஆணையத்தால் ஒதுக்கப்படும் வேறு எந்த வேலையும் செய்ய வேண்டும்.

DLSA Virudhunagar Recruitment

 விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் districts.ecourts.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • அனைத்து சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், வயது, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்ற ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • பின் விண்ணப்பத்தை நேரில் (அல்லது) தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பதாரர்கள் தபால் உறையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பில். தாங்கள் விண்ணப்பிக்கும் பணியை குறிப்பிட்டு பதவிக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு எழுத வேண்டும்.

DLSA Virudhunagar Recruitment

அனுப்பவேண்டிய முகவரி:

CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE,
District Legal Services Authority,
ADR Building, District Courl Campus,
Srivil liputtur – 626135,
Virudhunagar District.

DLSA Virudhunagar Recruitment

தேர்வு முறை மற்றும் பணிக் காலம் :

ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக பியூன் ஆகியோரின் தேர்வு தகுதியின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, கணினி அறிவு, திறன்கள் மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும். முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி தலைமையில் தேர்வுக் குழுவால் தேர்வு மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யட்டும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தை 16.06.2023, மாலை 5:00 மணிக்கு முன் அல்லது அதற்கு முன்னதாக, அனைத்து ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

DLSA Virudhunagar Recruitment

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago