சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்பந்த அடிப்படையில் நூலகப் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare ) என்பது இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இந்நிலையில், தற்போது இந்த அமைச்சகம் (Library Trainee ) நூலகப் பயிற்சியாளர் பதவிக்கு 9 காலியிடங்கள் உள்ளது என அறிவித்துள்ளது.
இந்த பதவியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும், ஆர்வமும் இருந்தால் இந்த PDF-ஐ க்ளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்கவேண்டிய தகுதிகள் மற்றும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான தகுதி
இந்த (Library Trainee ) நூலகப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து நூலக அறிவியலில் டிப்ளமோ (2 ஆண்டுகள்) பெற்றிருக்க வேண்டும். புதிதாக தேர்ச்சி பெற்றவர்கள் (2020 அல்லது அதற்குப் பிறகு வழக்கமான அடிப்படையில் அந்தந்தப் படிப்புகளை முடித்தவர்கள்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு..?
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 9,000 வழங்கப்படும் எனவும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 1 வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை வேலை செய்ய வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் மட்டும் பயிற்சியின் போது விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
இந்த பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் அதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அதைத் தொடர்ந்து தேர்வுக் குழுவின் தனிப்பட்ட நேர்காணல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது..?
இந்த பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பவேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கவனத்துடன் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
முகவரி
The Director
National Medical Library
Ansari Nagar, Ring Road, New Delhi – 110029
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…